கொரானோ வைரஸ் காரணமாக பல்வேறு துறைகளிலும் தினசரி வேலை செய்வோர் வேலை இல்லாமல் வருமானத்தை இழந்து வருகிறார்கள். அவர்களில் சினிமா துறை தொழிலாளர்களும் உள்ளார்கள்.
படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே அவர்களுக்கு தினச் சம்பளம் கிடைக்கும். படப்பிடிப்பு இல்லை என்றால் அவர்களுக்கு வேலை கிடையாது, வருமானமும் கிடையாது.
தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பெப்ஸி அமைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து சில நடிகர்கள், நடிகைகள் நன்கொடை வழங்கினார்கள்.
நடிகைகளில் நயன்தாரா 20 லட்சமும், ஐஸ்வர்யா ராஜேஷ் 1 லட்சமும் வழங்கினார்கள். வேறு எந்த நடிகையும் வழங்கவில்லை. இதனிடையே, தமிழிலும் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தெலுங்குத் தொழிலாளர்களுக்காக மட்டும் 2 லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். அதே சமயம், தமிழ் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை.
தமிழ் தொழிலளார்கள் மீது மட்டும் இந்த பாராமுகம் ஏனோ…?