தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொரானோ நிவாரண நிதியாக காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் ரூபாய் கொடுத்தார் என செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதையடுத்து காஜல் அகர்வால் தரப்பிலிருந்து தமிழ் தொழிலளார்களுக்கும் அளித்துள்ளோம் என செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்.
தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்கு 2 லட்சம், பெப்ஸி தொழிலாளர்களுக்கு 2 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு 1 லட்சம், மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு 1 லட்சம் என மொத்தம் 6 லட்ச ரூபாயை அளித்துள்ளார்.
அது மட்டுமல்லாது, அவர் வசிக்கும் மும்பை வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கியும், தெரு நாய்களுக்கு உணவு அளித்தும் வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.