‘பாகுபலி, சாஹோ’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவிலான நடிகராக உயர்ந்துவிட்டார் தெலுங்கு நடிகரான பிரபாஸ்.
ஒன்றன் பின் ஒன்றாக புதிய சாதனைகளைப் படைத்து வரும் பிரபாஸ், தற்போது ஒரு ஆக்ஷன் காட்சிக்காக புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
தான் நடிக்கும் படங்களின் ஆக்ஷன் காட்சிகளில் பிரபாஸ் பிரமாதப்படுத்துவது வழக்கம்.
2012ல் வெளிவந்த ‘ரெபெல்’ படத்தில் பிரபாஸின் ஆக்ஷன் காட்சிக்காகவே அந்தப் படம் அற்புதமாக ஓடியது.
உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் வலிமையை ஏற்றியுள்ள பிரபாஸ் செய்யும் ஆக்ஷன் காட்சிகளை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கும் பிரபாஸுக்கு ஏற்றபடியான ஆக்ஷன் காட்சிகளை வைப்பது ஒரு சவாலான விஷயம்.
அடுத்து அதிகமான ஆக்ஷன், அதிகமான காதல் என அவருடைய 20வதுபடத்தை உருவாக்க உள்ளார்.
அதன்பின் பின் நாக் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் பிரபாஸ். இப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாக் அஷ்வின் தேசிய விருது பெற்ற நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் ‘மகாநடி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.