வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், சூர்யா, மமிதா பைஜு, ராதிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஆகஸ்ட் 14ல் வெளியான படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.
இப்படத்திற்கு முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
சூர்யா நடித்து இந்த ஆண்டில் மே மாதத்தில் வெளிவந்த ‘கருப்பு’ படம் 340 கோடி வசூலைக் கடந்தது. அதற்கடுத்து தற்போது வெளியாகி உள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 100 கோடி படங்களைக் கொடுத்துள்ளார் சூர்யா.