நோட்டீஸ் சர்ச்சைகளுக்கு நடிகை கௌதமி விளக்கம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரானோ தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு பின் அகற்றப்பட்டது.

அதற்கு கமல்ஹாசனும் விளக்க அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். நடிகை கௌதமி, கமல்ஹாசனுடன் வசித்த போது கமல்ஹாசன் முகவரியைத்தான் தன் முகவரியாக பாஸ்போர்ட்டில் கொடுத்துள்ளார். அதனடிப்படையில்தான் நேற்று அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டதாகத் தெரிகிறது.

தற்போது சென்னை, கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் கௌதமி வசித்து வருகிறாராம். ஆனால், அந்த வீட்டில் இன்னும் எந்த நோட்டீசும் ஒட்டப்படவில்லை.

இதனிடையே, இந்த நோட்டீஸ் சர்ச்சை குறித்து டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார் கௌதமி.

அதில், “நான் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன். நான் இந்தியாவிற்குத் திரும்பி 20 நாட்கள் ஆகிறது. நீங்கள் அனைவரும் பரிந்துரைக்கப்பட்ட, விவேகமான, விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். இந்த நேரத்தை புத்திசாலித்தனமாகவும், நேர்மையாகவும் பயன்படுத்துங்கள்,” என்று கூ 

Read Previous

தூர்தர்ஷன் – ராமாயணத்தைத் தொடர்ந்து ‘மகாபாரதம்’ தொடர்

Read Next

காதலியுடன் புகைப்படம், கமெண்ட், பிளாக் – விஷ்ணு விஷால் கோபம்

Most Popular