தூர்தர்ஷன் – ராமாயணத்தைத் தொடர்ந்து ‘மகாபாரதம்’ தொடர்

1980களில் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இதிகாசத் தொடர்கள் ராமாயணம், மகாபாரதம். அந்தத் தொடர்களுக்கு அப்போது மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆனாலே அந்தத் தொடருக்காக வீட்டை விட்டு வெளியில் கூட செல்லாமல் மக்கள் அத் தொடர்களைப் பார்த்து ரசித்தார்கள்.

தற்போது அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கால் யாரும் வீட்டை விட்டு வெளியில் அதிகம் செல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காக அந்த பழைய டிவி தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமிட்டது.

அதன்படி இன்று காலை ராமாயண் தொடரும், நண்பகலில் மகாபாரதம் தொடரும் ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளன.

ராமாயணம் ஒளிபரப்பாகும் நேரம்

தூர்தர்ஷன் – காலை 9 மணி மற்றும் இரவு 9 மணி

மகாபாரதம் ஒளிபரப்பாகும் நேரம்

டிடி பாரதி – நண்பகல் 12 மணி மற்றும் இரவு 7 மணி

மேலும், ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாரூக்கான நடித்து 1989ல் ஒளிபரப்பான ‘சர்க்கஸ்’ தொடரையும் தூர்தர்ஷஇரவு 8 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள்.

Read Previous

இந்த சமயத்தில் இது தேவையா ஹன்சிகா ?

Read Next

நோட்டீஸ் சர்ச்சைகளுக்கு நடிகை கௌதமி விளக்கம்

Most Popular