கொரானோ நோய் உலகையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம் என கூடிக் கொண்டே போகிறது.
அனைவரும் வீட்டிலேயே இருங்கள், வெளியே போகாதீர்கள் என பலரும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் சிலர் கேட்பதாகவே இல்லை. ஜாலியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் கொரானோ தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பல சினிமா பிரபலங்கள் பல தனிப்பட்ட வீடியோக்கள் மூலம் மக்களுக்கு கொரானோ தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஹிந்தித் திரையுலகின் நட்சத்திரத் தம்பதியான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் அன்பு மகள் ஆராத்யா ‘கொரானோ’ குறித்து ஒரு ஓவியத்தை வரைந்திருக்கிறார்.
அதை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ள தாத்தா அமிதாப் பச்சன், “நீங்கள் உணர்கிறீர்கள் .. உங்களுக்கு புரிகிறது .. நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் .. நீங்கள் 8 வயதாக இருந்தாலும் .. இது பேத்தி ஆராத்யா செய்தது,” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.