த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிரஞ்சிவி

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. இப்போது அந்த இடத்தில் இல்லை என்றாலும் தமிழில் மட்டும் முன்னணி நடிகையாகவே இருக்கிறார்.

தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘ஆச்சார்யா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அந்தப் படத்தில் நடித்திருந்தால் தெலுங்கில் அவருக்கு ஒரு ரீ-என்ட்ரி ஆக இருந்திருக்கும் என்றார்கள்.

ஆனால், தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் அப்படத்தில் த்ரிஷாவால் நடிக்க முடியவில்லை. 

ஒப்பந்தமாகி பின்னர் விலகினாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல்  இன்று பிறந்த நாள் கொண்டாடும் த்ரிஷாவுக்கு சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு த்ரிஷாவும் நன்றி கூறியிருக்கிறார்.

தமிழில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ள ‘பரமபத விளையாட்டு, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2’ ஆகிய படங்கள் முடிந்தும் இன்னும் வெளியாகாமல் உள்ளன.

‘பொன்னியின் செல்வன்’லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘ராங்கி’ படத்திலும் தற்போது நடித்து வருகிறார் த்ரிஷா. 

Read Previous

‘அருவா’ – சூர்யா ஜோடியாக ராஷி கண்ணா

Read Next

இது யார் வரைந்த ஓவியம் தெரியுமா ?

Most Popular