ஹரி, சூர்யா கூட்டணி மீண்டும் இணைய உள்ள படம் ‘அருவா’.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரானோ ஊரடங்கிற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.
படத்தில் சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இதற்குமுன் சூர்யாவுடன் ஜோடி சேராத நடிகைகள் யாராவது நடிப்பார்கள் என்றார்கள்.
அதன்படி தற்போது படத்தில் சூர்யாவின் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கப் போகிறார். இது பற்றிய தகவலை ராஷி கண்ணாவே தெரிவித்துள்ளார். இன்று மாலை ரசிகர்களுடன் டிவிட்டரில் சாட் செய்தார். அப்போது ஒரு ரசிகர் அடுத்து என்ன படங்களில் நடிக்க உள்ளீர்கள் என்று கேட்டதற்கு ராஷி கண்ணா பதிலளித்துள்ளார்.
“அரண்மனை 3, மற்றும் ஹரி சார் இயக்கத்தில் சூர்யா சார் படத்தில் நடிக்கிறேன்,” என தெரிவித்துள்ளார். ஆனால், படத்தின் பெயரான ‘அருவா’ என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இப்படத்தின் பெயரில் ஏற்கெனவே ஒரு படம் உருவாகி உள்ளதால் ஒருவேளை படத்தின் பெயரை மாற்றும் எண்ணம் இருக்கலாம் எனத் தெரிகிறது