கொரானோ நிவாரண நிதி நிகழ்ச்சியில் ஆமீர்கான்

கொரானோவுக்காக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக,  ‘ஐ பார் இந்தியா’ நிகழ்ச்சியில், ஹிந்தி நடிகர் ஆமீர்கான் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோர் ‘கிளாசிக்’ பாடல்களைப் பாடினார்கள்.

மே 3ம் தேதி இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 85 நட்சத்திரங்கள் நேரடியாகப் பாடினார்கள். இரவு 7.30 மணிக்கு பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி. 

ஆமீர், கிரண் இருவரும் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் ஒவ்வொருவரும் நிவாரண நிதி வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.

ஆமீர் பேசுகையில், “நாம் ஒரு மோசமான கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். மக்கள் அவர்களது நம்பிக்கையை இழக்காமல் இருக்க ஏழைகளுக்கு நாம் உதவ வேண்டும்,” என்றார். “இந்த கடினமான நேரத்தில் நாம் ஒன்றிணைய வேண்டும் என,” கிரண் கேட்டுக் கொண்டார்.

Read Previous

இது யார் வரைந்த ஓவியம் தெரியுமா ?

Read Next

பியானோ வாசித்து பாடவும் செய்த ஹிருத்திக் ரோஷன்