இசையமைப்பாளர் அனிருத் குறித்த ஆவணப்படம் ஒன்று உருவாகி கொண்டிருக்கிறது.
‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அவருடைய பாடல்கள் தொடர்ச்சியாக இளைஞர்கள் மத்தியில் வைரலானதால், தற்போது இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக வலம் வருகிறார். இப்போது சுமார் 12 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதனிடையே, அனிருத்தின் அறிமுகம், பாடல்களின் வெற்றி, இயக்குநர்களின் பேட்டிகள் என அனைத்தையும் உள்ளடக்கி ஆவணப்படம் ஒன்று உருவாகிறது. இதற்காக ஒரு குழு கடந்த 4 மாதமாக பணிபுரிந்து வருகிறது. இதில் அவருடைய பாடல்கள் எப்படி உருவானது என்பது குறித்த பிரத்யேக வீடியோக்களும் இடம்பெறவுள்ளன.
இந்த ஆவணப்படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதனை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.