தாமதமாகிறது விஜய் மகனின் இயக்குநர் கனவு

விஜய் மகன் சஞ்சய்யின் இயக்குநர் கனவு தாமதமாகிறது. இன்னும் எந்தவொரு நாயகனும் ஒப்புக் கொள்ளவில்லை.

விஜய் மகன் சஞ்சய் சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குநராக வேண்டும் என்ற கனவில் கதையொன்றை எழுதினார். இதனை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்து, அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி சுமார் ஒர் ஆண்டு ஆகப் போகிறது.

இந்தக் கதையினை மெருக்கேற்றும் பணி நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. அந்தக் கதையினை கேட்டுவிட்டு, பல்வேறு நடிகர்கள் நடிக்க சம்மதம் தெரிவித்தாலும் 2025-ம் ஆண்டு தான் கால்ஷீட் என்றார்கள். இது படக்குழுவினருக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

இதனால் பெரிய நாயகனுக்கு என்று இருந்த கதையினை இப்போது சின்ன நாயகன் நடிக்கும் அளவுக்கு சுருக்கிவிட்டார்கள். இந்தப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இப்போது அதுவும் முடிவடைந்து, சிறு நாயகர்களுக்கு சொல்லும் பணி தொடங்கி இருக்கிறது.

இப்போதைய சூழலில் எந்த நாயகன் தேதிகள் கொடுக்கிறாரோ, அவரை வைத்து படமாக்க முடிவு செய்திருக்கிறார் சஞ்சய். ஆனால், இப்போது வரை யாரும் ஒப்புக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

Read Previous

7 ஜி – விமர்சனம்

Read Next

உருவாகிறது அனிருத்தின் ஆவணப்படம்

Most Popular