‘சூர்ப்பனகை’ – முதல் பார்வையை வெளியிட்ட விஜய் சேதுபதி

திருடன் போலீஸ், உள்குத்து’ படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து இயக்கும் படம் ‘சூர்ப்பனகை’.

ஆப்பிள் டிரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது.

ரெஜினா கசான்ட்ரா முதன்மை கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

அது பற்றி இயக்குனர் கார்த்திக் ராஜு கூறுகையில்,

“விஜய் சேதுபதி எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது  மொத்த படக்குழுவிற்கும் பெரும் மகிழ்ச்சி. இது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

“சூர்ப்பனகை” எனும் பெயர் படத்தில் என்ன வகையான பாதிப்பை தரும், ரெஜினா கஸண்ட்ராவின் கதாபாத்திரம் என்ன மாதிரி இருக்கும் என பெரும் ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டியிருக்கும். 

அதுவும் ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள ரெஜினா கஸண்ட்ராவின் தோற்றம் மேலும் பல கேள்விகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கும். இது குறித்து தற்போது ஏதும் சொல்ல முடியாது. ரசிகர்கள் அதனை திரையில் காணட்டும். அப்போது தான் அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும். 

‘சூர்ப்பனகை’ ஒரு மர்ம வகை திரில்லர் திரைப்படம். சாகசம், ஹியுமர், திரில்லர் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும். 

ரசிகர்களை புது வகை திரில் அனுபவத்திற்கு அழைத்துச் செல்வதாக இப்படம் இருக்கும்,” என்றார்.

கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கி, குற்றாலம் முதலான இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Read Previous

வால்டர் – குழந்தைகள் கடத்தலின் பின்னணி

Read Next

சினிமாவிலும் குடும்பமாக இருக்க வேண்டும் – சசிகுமார்

Most Popular