செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரிப்பில், கதில்வேலு இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையமைப்பில், சசிகுமார், நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ராஜவம்சம்’.
இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
விழாவில் தயாரிப்பாளர் பேசியதாவது,
"இயக்குநர் கதை சொன்னதும் படம் பண்ண ஹீரோவிடம் டேட் கேட்டோம். அவரும் உடனே டேட் கொடுத்தார். அடுத்து இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி படம் எடுப்பது என்று யோசித்தேன். ஆனால் இயக்குநர் "சார் எடுத்துவிடலாம் சார்" என்று நம்பிக்கையாகச் சொன்னார். இந்தப் படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் மற்ற அனைத்து நடிகர்களும் யோசிக்காமல் டேட் கொடுத்தார்கள். இப்படத்தில் ஒத்துழைத்து நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கும் என் நன்றி," என்றார்
இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில்,
"வில்லேஜ் படங்கள் எல்லாம் எனக்கு வருவதே இல்லை. கூட்டுக் குடும்பத்தின் வேல்யூ எல்லாம் எனக்குத் தெரியும். எனக்கு கம்பம் அருகே தான் சொந்த ஊர். அதனால் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை படமாக்கும் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு இயக்குநர் கதிர்வேலுக்கு நன்றி," என்றார்
நிக்கி கல்ராணி பேசும் போது,
“நான் முழுக்க முழுக்க சிட்டில வளர்ந்த பொண்ணு. அதனால் கிராமத்து கல்ச்சர் எனக்குப் புது அனுபவமாக இருந்தது. நல்ல அனுபவத்தைத் தந்த கதிர்வேலு சாருக்கு நன்றி. சூட்டிங்ல நல்ல எக்ஸ்பீரியன்ஸ். இந்த ராஜவம்சம் இவ்வளவு க்ராண்டியரா இருக்குன்னா மூன்று பேர்தான் காரணம். நடிகர் சசிகுமார் சார், தயாரிப்பாளர் ராஜா சார், இயக்குநர் கதிர்வேலு இவர்கள் மூன்றுபேரும் தான். படத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி,"என்றார்.
இயக்குநர் கதிர்வேலு பேசியதாவது,
"சசிகுமார் சார் கதையைக் கேட்டுட்டு ரொம்ப நல்லாருக்குடா என்றார். தயாரிப்பாளரும் கதை கேட்ட உடனே என்னை கமிட் செய்தார். இந்தப்படம் இன்னைக்கு இப்படியொரு ஸ்டேஜ்ல இருக்கான்னா அதுக்கு முழு முதல் காரணம் ராஜா சார். நான் யோசிச்ச விசயத்தை ஸ்கிரீன்ல கொண்டு வர ராஜா சார் ரொம்ப சப்போர்ட் பண்ணார்.
என்னோட ஆர்டிஸ்ட் எல்லாரும் நன்றாக உதவி செய்தார்கள். யாரும் என்னிடம் கதையே கேட்கவில்லை. சசிகுமார் நிக்கி கல்ராணி இருவரிடம் மட்டும் தான் முழுக்கதையையும் சொன்னேன். கேமராமேன் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணார். அப்படியே தான் எடிட்டரும். சாம் சி எஸ், என் டார்லிங். அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தான் சாம் சி எஸ்ஸை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பக்காவாக பிஜிஎம் போட்டிருக்கார். இந்தப்படம் ரொம்ப ரொம்ப நல்ல படம். அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க," என்றார்.
நடிகர் சசிகுமார் பேசுகையில்,
"வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி. ராஜவம்சம் கூட்டுக் குடும்பத்தைப் பற்றிச் சொல்ற படம். அதைக் குடும்பமாகப் பார்க்கும் போது நம்ம எல்லாருக்கும் பிடிக்கும். நாற்பது நடிகர்கள் இருக்கிற படம்னா பட்ஜெட் ஜாஸ்தியாக இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் தயாரிப்பாளர் ராஜா சார் ரொம்ப நம்பிக்கையாக இருந்தார்.
இந்தப்படம் ஒரு நல்ல பீல் குட் படமாக இருக்கும். பெரிய பெரிய சீனியர் நடிகர்களோடு நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இவ்ளோ பேரையும் ஹேன்டில் பண்ணிய கதிரும் கேமராமேனும் பாராட்டுக்குரியவர்கள். பர்ஸ்ட் இந்த டீம் பார்ம் ஆகுறதுக்குள் கொஞ்சம் சிரமமாக இருந்தது. பின் போகப்போக சரியாகிவிட்டது. இந்தப் படத்தில் எல்லாருமே அழகாக இருக்கிறார்கள். சினிமாவிலும் நாம் ஒரு குடும்பமாகத் தான் இருக்க வேண்டும்," என்றார்.