த்ரிஷா ஹீரோயினாக நடித்த ‘சமர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நாளை (13-01-2013) வெளியாகிறது.
த்ரிஷா இதற்கு முன் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படம் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியன்று வெளியானது.
ஏறக்குறைய 15 மாதங்கள் கழித்து , ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் த்ரிஷா நடித்த படம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
2012ல் த்ரிஷா நடித்த எந்த தமிழ்ப் படமும் வெளிவரவில்லை.
அதை சரி செய்யும் விதத்தில் தற்போது மூன்று தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி ஜோடியாக ‘பூலோகம்’, ஜீவா ஜோடியாக ‘என்றென்றும் புன்னகை’, தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் ‘ரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நாளை வெளிவர இருக்கும் ‘சமர்’ படத்தில் விஷால் ஜோடியாக முதல் முறையாக நடித்திருக்கிறார்.