சந்தானம் – பாக்யராஜ் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது ?

klta‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை ‘இன்று போய் நாளை வா’ படத்தின் ரீமேக் ஆக எடுத்திருப்பதாக இயக்குனரும் , நடிகருமான கே. பாக்யராஜ் சமீபத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் நாளை வெளியாவதை முன்னிட்டு இந்த விஷயத்தில் சந்தானத்திற்கும், பாக்யராஜுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உதயநிதி ஸ்டாலினின்  ரெட் ஜெயன்ட் மூவீஸ் படத்தை ஏறக்குறைய 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு செய்வதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.

படத்திற்கான ரிசர்வேஷனுக்கு பல ஊர்களில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாக , ஹீரோக்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வரவேற்பு இந்த படத்திற்காக சந்தானத்திற்கு கிடைத்துள்ளது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

‘கட்’ பண்ணப்பட்ட அலெக்ஸ் பாண்டியன்

Read Next

ஒரு ஆண்டுக்குப் பின் த்ரிஷா படம் வெளியாகிறது…

Most Popular