சமந்தாவிற்கு ‘பிளான்க் செக்’ கொடுத்த தயாரிப்பாளர்

samantha-2ந்திர தேசத்தின் தற்போதைய பரபரப்பான பேச்சு இதுதான்.

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ‘பெல்லம் கொன்டா’ சுரேஷ். பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தமிழில் தயாராகும் பல பல படங்களை தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து வெற்றி பெறச் செய்தவர்.

ராகவா லாரன்ஸ்-ன் ‘முனி – காஞ்சனா’ படத்தை தெலுங்கில் தயாரித்தவர் இவர்தான்.

இவருடைய மகன் சாய். இவரை தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார் சுரேஷ்.

சில நாட்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நாயக்’ படத்தின் இயக்குனரான  வி.வி. நாயக் அடுத்து இயக்கப் போகும் படத்தில்தான் அறிமுகமாகப் போகிறார் சாய்.

இந்த படத்தில் சாய் ஜோடியாக நடிப்பதற்குத்தான் தயாரிப்பாளர் பெல்லம் கொன்டா சுரேஷ், சமந்தாவிற்கு சம்பளமாக ‘பிளான்க் செக் ’ கொடுத்ததாக ஆந்திர திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இப்போது ஆந்திராவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தாதான். இவர் நடித்து நேற்று வெளியான தெலுங்கு படமும் சூப்பர் ஹிட்டாகி விட்டது.

தயாரிப்பாளர் சுரேஷ் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த படத்தில் சமந்தாவும் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Read Previous

ஒரு ஆண்டுக்குப் பின் த்ரிஷா படம் வெளியாகிறது…

Read Next

இன்றைய ரிலீஸ்

Most Popular