இன்றைய ரிலீஸ்

samarபொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று இரண்டு படங்கள் வெளியாகின்றன.

சமர்

ஜெய பாலாஜி ரியல் மீடியா பி. லிட். தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம். இசை – யுவன்ஷங்கர் ராஜா. விஷால், திரிஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

திரு ஏற்கெனவே விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தை இயக்கியவர். விஷால், த்ரிஷா சமர் படத்தில் முதன் முறையாக இணைந்து ஜோடியாக நடிக்கிறார்கள்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா

ஸ்ரீ தேனாண்டள் பிலிம்ஸ் , ஹேன்ட்மேட் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ். மணிகண்டன் இயக்கியிருக்கும் படம். இசை – தமன். சந்தானம், பவர் ஸ்டார், சேது, விசாகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சந்தானம் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். ரெட்ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வெளியிடுகிறார்.

Read Previous

சமந்தாவிற்கு ‘பிளான்க் செக்’ கொடுத்த தயாரிப்பாளர்

Read Next

‘லட்டு’ – லவ் பண்ணுவார்கள் – சந்தானம்