அடுத்தடுத்து இரண்டு படங்களா ? விக்ரம் பிரபுவின் குழப்பம்…

vikram-prabhu-newsடந்த ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘கும்கி’. நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் , நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு அந்த படத்தின் மூலம் தமிழ்த் திரையுகில் நாயகனாக அறிமுகமானார்.

ஏறக்குறைய, ஒரு ஆண்டாக வேறு எந்த படமும் ரிலீசாகாத நிலையில் விக்ரம் பிரபுவின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது அவரது ரசிகர்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

யுடிவி, திருப்பதி பிரதர்ஸ் இணைந்து தயாரிக்க ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கியுள்ள ‘இவன் வேற மாதிரி’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இதற்கடுத்து, யு டிவி தயாரிப்பில் ‘தூங்கா நகரம்’ கௌரவ் இயக்கியுள்ள ‘சிகரம் தொடு’ திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

ஒரு வருடமாக படமே வெளிவராத நிலையில் இப்படி இரண்டு படங்கள் உடனுக்குடன் வெளிவருவது சரியாக இருக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

 

Read Previous

250 டாலர் அபராதம் கட்டிய கார்த்தி…

Read Next

ஆரம்பம் – விமர்சனம்

Most Popular