250 டாலர் அபராதம் கட்டிய கார்த்தி…

azhaguraja audio launch_00035தீபாவளியான இன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்..எதைப் பார்ப்பது…எதை விடுப்பது…என்றே தெரியவில்லை…

சரி , மற்ற நிகழ்ச்சிகளை அப்புறமாக யு டியூபில் பார்த்துக் கொள்ளலாம் என நமக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில், காலையில் பார்த்து ரசித்த ஒரு நிகழ்ச்சி…காஃபி வித் டிடி…

‘அழகுராஜா’ கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் “ஜெயிலுக்குலாம் போயிருக்கீங்களா” என கார்த்தியிடம் திவ்யதர்ஷினி கேட்டதற்கு எந்த அதிர்ச்சியும் காட்டாமல் கார்த்தி ஒரு சுவாரசியமான நிகழ்வை சொன்னார்.

“நான் அமெரிக்காவுல படிச்சிட்டிருந்தப்பா, நயாகரா நீர் வீழ்ச்சியைப் பார்க்கலாம்னு நான், என் பிரண்ட் ஒருத்தன் கார்ல போயிட்டிருந்தோம்.  வேற ஒரு பிரண்ட் முன்னாடி  கார்ல போயிட்டிருந்தான். அவனுக்குதான் வழி தெரியும்.

திடீர்னு அவன் கார் காணாமல் போக, நாங்க வேகமா காரை ஓட்டிக்கிட்டே போனோம். கொஞ்ச நேரத்துல எங்க கார் பக்கத்துல போலீஸ் கார் வந்து எங்களை மடக்கினாங்க.

என்னன்னு பார்த்தால் நாங்க போயிட்டிருந்த டிராக்ல 55 கிமீ வேகத்துல போகக் கூடாதாம். நாங்க போனது 90 கிமீ வேகம். அப்புறம் பக்கத்துல இருக்கிற கோர்ட்டுக்கு போயி எங்களை நிக்க வச்சி, 250 டாலர் அபராதம் கட்டின பிறகுதான் எங்களை விட்டாங்க, ” என அவருடைய  ‘ஜெயில்’ அனுபவத்தைச் சொன்னார்.

இங்கலாம் மாட்டினா, அபராதம் கேக்க மாட்டாங்க , ஆட்டோகிராப்தான் கேப்பாங்க…

Read Previous

‘சுட்ட கதை’ – 3ம் தேதியன்று ‘புது யுகம்’ டிவியில்…

Read Next

அடுத்தடுத்து இரண்டு படங்களா ? விக்ரம் பிரபுவின் குழப்பம்…