லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சுபு இயக்கத்தில் வெங்கி, பாலாஜி, லட்சுமிப்பிரியா, நாசர் மற்றும் பலர் நடித்து கடந்த 25 – 10- 2013ம் தேதி வெளியான படம் ‘சுட்ட கதை’.
இப்படத்தை சமீபத்தில் ஒளிரப்பை துவக்கிய ‘புது யுகம்’ தொலைக்காட்சியில் வரும் ஞாயிறன்று (நவம்பர் 3ம் தேதி) மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
அதுவும் எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாமல் இந்த படத்தை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
திரைக்கு வந்து சில வருடங்களே ஆன, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, என அழைத்தது போக இனி திரைக்கு வந்து சில நாட்களே ஆன, என இந்த படத்தின் மூலம் தொலைக்காட்சிகள் ஒரு புது சகாப்தத்தை உருவாக்க ஆரம்பித்துள்ளன.
திரைக்கு வந்து சரியாக 8 நாட்களே ஆன நிலையில் இப்படம் ஒளிபரப்பாக உள்ளது புதுமையிலும் புதுமை.
இப்படியே போனால் திரைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன என அழைக்க ஆரம்பித்து விடுவார்கள் போல.
தீபாவளி வேலையால் ‘சுட்ட கதை’ படத்தை பார்க்க முடியாமல் ஏங்கிப் போனவர்கள் கவலைப்பட வேண்டாம்.
நவம்பர் 3ம் தேதி ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு ‘புது யுகம்’ தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்…