தென் கொரியா, பூசான் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரையிடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘விக்ரம்’ படம் மிகப் பெரும் வசூலைக் குவித்து மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் அக்டோபர் 5 முதல் 14ம் தேதி வரை தென் கொரியாவின் பூசான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘ஓபன் சினிமா’ என்ற பிரிவில் திரையிடப்பட உள்ளது. 

இது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைமை நிர்வாகி நாராயணன் கூறுகையில், “உலகெங்கிலும் ‘விக்ரம்’ திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது. பூசான் சர்வதேசத் திரைப்பட விழா, இந்தத் திரைப்படத்தின் கிரீடத்தில் சூட்டப்படும் இன்னொரு மைல்கல். இந்தத் தேர்வு ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. உலகின் பல பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடப்படும் பல அற்வுதமான திரைப்படங்களுடன் எங்கள் படமும் திரையிடப்படுவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. ரசிகர்களின் அன்புக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

பொன்னியின் செல்வன் – மூன்றே நாளில் 200 கோடி வசூல்

Read Next

‘ஆதி புருஷ்’ டீசர், 5 மொழிகளில் 100 மில்லியன் சாதனை