விபீஷணனாக ஒப்பந்தம் ஆவாரா விஜய் சேதுபதி?

விபீஷணனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆவாரா என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

’தங்கல்’ படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி, இந்தியில் ராமாயணக் கதையை இயக்கவுள்ளார். 

இதற்காக பல வருடங்களாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் இந்தப் படத்தினை பல்வேறு தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இதிலிருந்து பலரும் விலகிவிட்டார்கள்.

தற்போதுள்ள தகவலின்படி ராமராக ரன்வீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. 

மேலும், ஹனுமனாக நடிக்க சன்னி தியோல், கைகேயி ஆக நடிக்க லாரா தத்தா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக ராவணனின் சகோதரனான விபீஷணனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் நிதேஷ் திவாரி. 

இந்தக் கதைகாக தான் தயார் செய்துள்ள விஷயங்கள் மற்றும் படப்பிடிப்பு எப்படியிருக்கும் உள்ளிட்ட விஷயங்கள் அனைத்தையும் எடுத்துரைள்ளார். 

இதில் விஜய் சேதுபதி சந்தோஷமானதாகவும் விரைவில் இதில் ஒப்பந்தம் ஆவார் என்று இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராமாயணம் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. இரண்டு மாதங்களில் முதல் பாகத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். 

சுமார் ஒன்றரை ஆண்டுகள் மட்டும் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளுக்கு செலவழிக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Read Previous

வெளியானது ‘தெறி’ இந்தி ரீமேக்கின் தலைப்பு

Read Next

சிவகார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டிய ரஜினி

Most Popular