‘நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம்’ படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் ஒரு பாடலாசிரியரும் கூட. ‘என்னை அறிந்தால், மாரி, ரெமோ, அச்சம் என்பது மடமையடா, விக்ரம் வேதா, இரும்புத்திரை’ ஆகிய படங்களிலும், ‘நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களிலும் சில ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதிய விக்னேஷ் சிவன், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இதற்கு முன் யுவன் இசையில் ‘யாக்கை’ படத்தில் ‘சொல்லித் தொலையேன்மா’ என்ற பாடலையும், ‘இரும்புத் திரை’ படத்தில் ‘ஆங்கிரி பேர்டு’ பாடலையும் எழுதியிருக்கிறார். இப்போது மூன்றாவது முறையாக யுவன் இசையில் எழுதியிருக்கிறார். செல்வராகவன் இயக்கும் படம் ஒன்றில் அவர் எழுதுவது இதுவே முதல் முறை.