சர்கார் டீசர், 24 மணி நேர சாதனை என்ன ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியுபில் வெளியிடப்பட்டது.

வெளியானதிலிருந்தே அடுத்தடுத்து பல சாதனைகளைப் புரிந்த இந்த டீசர், 292 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனையைப் படைத்தது.

24 மணி நேர முடிவில் 1 கோடியே 60 லட்சம் பார்வைகளும், 12 லட்சம் லைக்குகளும், 1 லட்சம் கமெண்ட்டுகளும் பெற்று மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது.

விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘மெர்சல்’ படத்தின் டீசர் 4 கோடி பார்வைகளையும், 11 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. தற்போது லைக்குகளில் புதிய சாதனையைப் படைத்துவிட்டது. அடுத்து 4 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைக்க வேண்டும். படம் வெளிவருவதற்கு இன்னும் 15 நாட்கள் உள்ளன. அதற்குள் அந்த சாதனை படைக்கப்படுமா என்பதுதான் கேள்வி.

‘சர்கார்’ டீசருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.

Read Previous

உலக சாதனை படைத்த ‘சர்கார்’ டீசர்

Read Next

என்ஜிகே – யுவன் இசையில் பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்

Most Popular