ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்.
அதன்பின், ‘3, பூஜை, புலி, வேதாளம், சி 3’ ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் அவரது அப்பா இயக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படம் பல மாதங்களாக படமாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என வேறு எந்த மொழிகளிலும் நடிக்காத ஸ்ருதி, ஹிந்தியில் மட்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதனிடையே, அவர் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்ருதியின் அப்பா கமல்ஹாசன், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். அப்பா வழியில் ஸ்ருதியும் டிவி தொகுப்பாளர் ஆகிவிட்டார்.
சில வாரங்களுக்கு முன்புதான் சன் டிவியில் விஷால், ‘நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியையும், பிரசன்னா சன் லைப் டிவியில் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியையும், வரலட்சுமி, ‘உன்னை அறிந்தால்’ என்ற நிகழ்ச்சியை, ஜெயா டிவியிலும் தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார்கள்.
அவர்கள் வரிசையில் தற்போது ஸ்ருதியும் சேர்ந்துள்ளார்.
https://twitter.com/proyuvraaj/status/1053999717896441856