கொரானோ வைரஸ் காரணமாக மக்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பிரதமரும், மாநில முதல்வர்களும் நிவாரண நிதிக்காக கோரிக்கை வைத்தனர். அதன் பொருட்டு பலரும் நிவாரண உதவிகளை அளித்து வருகிறார்கள்.
தமிழ் நடிகரான அஜித் நேற்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தலா 50 லட்சம், பெப்ஸி அமைப்புக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
அவருடைய உதவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜு, முதல்வரின் நிவாரண நிதிக்கு அஜித் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து டிவீட் செய்துள்ளார்.
அதில், “சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கின்ற அன்புச் சகோதரர் திரு.அஜித் அவர்கள் #Coronavirus தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1.25 கோடி வழங்கியிருக்கின்றார். அவருக்கு செய்தி மற்றும் விளம்பர துறையின் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,“ எனக் குறிப்பிட்டுள்ளார்.