டிவிட்டரில் அடிக்கடி ஏதாவது ஒரு வம்பை இழுப்பவர் தெலுங்குத் திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா.
நேற்று அவருடைய டிவிட்டரில் மணிரத்னம் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு அவரைப் பற்றி பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த டிவீட்டில், “சூப்பர் சீரியஸ் மணிரத்னம் முதல் முறையாக வெட்கப்படுவதைப் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படத்தில் மணிரத்னத்திற்குப் பூங்கொத்து கொடுப்பவர் ‘காற்று வெளியிடை’ படத்தில் அவர் அறிமுகப்படுத்திய நாயகி அதிதி ராவ் ஹைதரி.
மணிரத்னம், ராம்கோபால் வர்மா ஒரே காலகட்டத்தில் இயக்குனர்களாக அறிமுகமானவர்கள். தமிழில் மணிரத்னமும், தெலுங்கில் வர்மாவும் இருவருக்கென தனித் தனி பாதைகளை வகுத்துக் கொண்டவர்கள்.
ஆனால், மணிரத்னம் அமைதியானவர், வர்மா அடிக்கடி சர்சைகளை ஏற்படுத்துபவர்.|