‘புஷ்பா’ மூலம் தமிழுக்கு வரும் அல்லு அர்ஜுன்

தெலுங்குத் திரையுலகின் இளம் ஹீரோக்களில் தனிப் பெரும் ஆளுமையாக இருப்பவர் அல்லு அர்ஜுன். அவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக ஓடியிருக்கின்றன.

இந்த வருடப் பொங்கலுக்கு அவர் நடித்து வெளிவந்த ‘அலா வைகுந்தபுரம்லோ’ பெரிய வெற்றியைப் பெற்றது.

சிரஞ்சீவிக்கு அடுத்து தெலுங்கில் நடனத்தில் சிறந்து வளங்குபவர் இவர்தான். சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, அல்லு அர்ஜுனின் அத்தை. 

சென்னையில் பிறந்து வளர்ந்தவர்தான் அல்லு அர்ஜுன். நீண்ட காலமாகவே தமிழில் அறிமுகமாக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க ஒரு படத்தை பிரம்மாண்டமாக ஆரம்பித்தார்கள். பின்னர் அந்தப் படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தெலுங்கில் அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தை தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப் போகிறார்களாம்.

இன்று படத்தின் போஸ்டரையும் வெளியிட்டார்கள். போஸ்டரிலேயே இது எந்த மாதிரியான கதை என்பதற்கு ஒரு ‘க்ளு’வும் கொடுத்திருக்கிறார்கள்.

பின்னணியில் காவல் துறையினர் நிற்க, செம்மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதற்கு முன் கைதியாக அழுக்கு உடையுடன் அல்லு அர்ஜுன் அமர்ந்திருக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

ஆந்திராவில் செம்மரக் கட்டைகளைக் கடத்தியதாக 2015ம் ஆண்டு 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது நடந்தது ஏப்ரல் 2, 2015ம் தேதி. அந்த சம்பவம் நடந்து நேற்றுடன் 5 வருடங்கள் முடிந்த நிலையில் இன்று ‘புஷ்பா’ பட போஸ்டரை வெளியிட்டிருப்பதில் இருந்தே, இந்தப் படத்தின் கதை அது சம்பந்தப்பட்ட ஒன்றுதான் என்பதை புரிந்து கொள்ள முடியும்.|

Read Previous

8 கிராமங்களைத் தத்தெடுத்த ரஜினிகாந்த் நண்பர்

Read Next

சூப்பர் சீரியஸ் மணிரத்னம் – ராம்கோபால் வர்மா கமெண்ட்

Most Popular