8 கிராமங்களைத் தத்தெடுத்த ரஜினிகாந்த் நண்பர்

கொரானோ வைரஸால் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். 

இந்தியா முழுவதும் உள்ள சினிமா பிரபலங்கள் பலரும் பல்வேறு வித உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகரும் ஆன மோகன் பாபு 8 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட 8 கிராமங்களைத் தத்தெடுத்து அக்கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

இரு வேளை உணவு மற்றும் 8 டன் காய்கறிகள், தேவையான பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறார்களாம்.

மோகன் பாபு, அவரது மகன் நடிகர் விஷ்ணு மஞ்சு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு எவ்வளவு நாள் நீடிக்கிறதோ அதுவரை அந்தக் கிராமத்தைப் பார்த்துக் கொள்ளப் போகிறார்களாம்.

அவர்களது இந்த உதவிக்கு தெலுங்குத் திரையுலகினர் பாராட்டி வருகிறார்கள்|

Read Previous

அஜித் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ?

Read Next

‘புஷ்பா’ மூலம் தமிழுக்கு வரும் அல்லு அர்ஜுன்

Most Popular