வேந்தர் டிவியில் வரும் ஞாயிறு 14ம் தேதி மற்றும் திங்கள் 15ம் தேதி காலை 11:00 மணிக்கு ‘கலைப்பொங்கல்’ சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டுகிறார்கள். அதோடு, பள்ளியில் உள்ள வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப பொங்கல் பானைகளை வைத்து பொங்கலிட்டு கோலாகலமான முறையில் கொண்டாடுகிறார்கள் .
பள்ளி மாணவர்கள் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், சிலம்பம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வண்ணமயமாய் நிகழ்த்தியிருக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி கலகலப்பான கலைநிகழ்ச்சியாய் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி ஞாயிறு மற்றும் திங்கள் இரவு 9 மணிக்கு மீண்டும் மறு ஒளிபரப்பாகிறது.
வேந்தர் டிவியில் தைத்திருநாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் ஞாயிறு காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
உரத்த சிந்தனையாளர் சபரிமாலா ஜெயகாந்தன் தலைமையில் சிறந்த பேச்சாளர்கள், இரு அணிகளாகப் பிரிந்து பேசும் இந்த பட்டிமன்றத்திற்கு “உழவர் வாழ்வியல் இனி மீளுமா..? வீழுமா..?” என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
உழவன் பெருமையை பறைசாற்றி, இயற்கையை வணங்கும் பொங்கல் திருநாளில் உழவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த சுவாரஸ்யமான பட்டிமன்றம் நேயர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.