புதுயுகம் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

புதுயுகம் தொலைக்காட்சியில் பொங்கல் அன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிகள்…

ஆலயங்கள் அற்புதங்கள்

ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் ஆலயம் – ருத்திரன்கோயில், திருக்கழுகுன்றம்.

சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கழுகுன்றத்தின், முதன்மையான கோயில் இத்திருத்தலம் ஆகும் . கோடி உருத்திரர்கள் பாவம் தீர இறைவன், கோடிலிங்கமாய் காட்சி அளித்த திருத்தலம்.திருநந்தி தேவர் கருடனின் ஆணவத்தை அடக்கி பூமியில் புதையச் செய்த தலம்.

திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற கோயில். காசி, தில்லை, திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சி, காளத்தி, மதுரை போன்றவை இறைவனின் உடலாகவும் மற்றும் கால்களில் கழல் அணிந்து பூசிக்கும் கோடி உருத்திரர் வழிபட்ட இந்த கோயில் சிவபெருமானின் இருதய பகுதியாகவும் விளங்குகிறது. காலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

ஹிப் ஹாப் பொங்கல்

பொங்கல் என்றால் நமக்கு அதிகம் நினனவுக்கு வருவது கிராமியம் சார்ந்த விஷயம் தான். குறிப்பாக அன்றைய தினம் இசை கூட கிராமிய மணம் சார்ந்து தான் ஆங்காங்கே ஒலிக்கும். ஆனால் அந்த பொங்கல் பண்டிகையன்று ஹிப் ஹாப் பாடல்களுடன் நம் பொங்கல் இருந்தால் எப்படி இருக்கும்!

தமிழர்களின் பாரம்பரியம், இன்றைய நவீன பொங்கல் விழாக்கள், தமிழ் மொழியின் சிறப்பு என பல்வேறு தலைப்பின் கீழ் ஹிப்ஹாப் பாடல்களை பாடியிருக்கின்றனர்  ‘டியூட்ஸின் மெட்ராஸ்’ குழுவினர். இந்நிகழ்ச்சி பொங்கல் அன்று காலை 10:00 மணிக்கு உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

வைரல் அழகி

நமது சினிமா பிரபலங்களின் பட அனுபவங்களை கேட்பதில் நமக்கு எப்போதும் தனி ஆர்வம் இருக்கும். அந்த வகையில் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் பொங்கல் அன்று விண்வெளி சம்பந்தமான முதல் தமிழ் திரைபடம் ’டிக் டிக் டிக்’ படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ் அவர்களின் பிரத்தியேக பேட்டி ஒளிபரப்பாக உள்ளது.

டிக் டிக் டிக் படத்தின் அனுபவத்தையும், தனது சினிமா பயணத்தைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளும் ’வைரல் அழகி’ நிகழ்ச்சி இரவு 7.00 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

சிறப்பு மார்னிங் கஃபே

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் திருநாள் அன்று, பாடல்களின் இளம் நாயகனான கவிஞர் மதன் கார்க்கி பங்குபெறும் சிறப்பு மார்னிங் கஃபே நிகழ்ச்சியில், எந்திரனில் தொடங்கி 2.O வரை அவர் பயணித்த சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது இந்நிகழ்ச்சியினை கண்மணி மற்றும் சுவாதிஷ்டா தொகுத்து வழங்குகின்றனர்.

Read Previous

தமிழ், தெலுங்கில் ‘பொட்டு’, பிப்ரவரி வெளியீடு

Read Next

வேந்தர் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Most Popular