தமிழ், தெலுங்கில் ‘பொட்டு’, பிப்ரவரி வெளியீடு

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’.

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை அமைத்து வடிவுடையான் இயக்கியுள்ளார். மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கர ஹாரர் படாமாக உருவாகி உள்ளது ‘பொட்டு’.

தமிழில் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு U/A பெற்றது.தெலுங்கு சென்சாருக்காக காத்திருந்த ‘பொட்டு’ நேற்று தெலுங்கில் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளார்கள்.

தெலுங்கில் என்கேஆர் பிலிம்ஸ் பட நிறுவனம் ‘பொட்டு’ படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

விஜய் டிவி பொங்கல் கொண்டாட்டம் 2018

Read Next

புதுயுகம் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்