விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ‘நினைக்கத் தெரிந்த மனமே’ என்ற தொடர் இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். வசதியும் அன்பும் கொண்ட கணவர் அரவிந்த் மற்றும் குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை வாழ்ந்து வருகின்றார் தீபா. இருந்தும் தீபாவிற்கு தான் யார் என்பதும் அவளுடைய கடந்த கால வாழ்க்கையும் ஞாயாபகத்தில் இல்லை. அது அவரை உறுத்திக் கொண்டு இருக்கின்றது.
அடிக்கடி தீபாவுக்கு சில காட்சிகள் நினைவுக்கு வந்து செல்லும் போது அவருக்கு ஒரு பதட்டம் ஏற்படுகிறது. அதைத் தவிர்த்து அவர் தன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிக்கின்றார். ஆனால் அது நீடிக்கவில்லை. ஒருநாள் அனைத்தும் நொறுங்கி விடுகின்றது.
தீபாவின் கடந்த கால வாழ்க்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் தீபாவைப் பார்த்து விடுகின்றனர். தன் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று அவர்கள் தெரிவித்தபின் அரவிந்தின் குடும்பம் அதை மறுக்கின்றனர்.
அரவிந்த் என்ன கூறுவார் ?,
தீபாவுக்கு பின்னால் இருக்கும் மர்மமான கடந்த கால வாழ்கை என்ன ?,
அவரின் கடந்த வாழ்க்கையும் அவர் குடும்பமும் யார்? தீபாவின் இந்த நிலைக்குக் காரணம் என்ன ? போன்ற கேள்விகள் எழுகின்றன.
அவள் உண்மை என்று நினைத்த வாழ்கை பொய் என்று தோன்றுகின்றது.
இந்தத் தொடரில் ‘ரெட்டை வால் குருவி’ புகழ் அஸ்வின் அரவிந்தாக நடிக்கிறார். நடிகை ஐஸ்வர்யா இந்தத் தொடரின் மூலம் தமிழ்த் தொலைக்காட்சிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். கன்னடத் தொலைக்காட்சியின் பிரபலம் இவர்.
உமா ரியாஸ் இத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
பல திருப்பங்களுடன் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது ‘நினைக்கத் தெரிந்த மனமே’ தொடர்.