விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி ‘கலக்கப் போவது யாரு’.
இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழ்த் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பல நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து சிறப்பித்துள்ளனர்.
ஆனால், முதல் முறையாக தமிழக அரசியல் பிரபலங்கள், ‘காமெடி அரசியல்’ சுற்றுக்கு வருகை தந்துள்ளனர்.
நாஞ்சில் சம்பத், சீமான் இருவரும் இந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். போட்டியாளர்கள், காமெடி அரசியல் சுற்றில் இவர்கள் இருவரும் முன் அவர்களது நிகழ்வை செய்யவுள்ளனர்.
இந்த வாரம் இதுவரை கண்டிராத சிரிப்பு விருந்தை போட்டியாளர்கள் கொடுக்க உள்ளனர்.
ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மகேஷ், மிமிக்ரி சேது, பிரியங்கா, ஆர்த்தி ஆகியோர் உள்ளனர்.
வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.