விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜுனியர் 6 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
சங்கர் மகாதேவன், சித்ரா, எஸ்பிபி சரண், கல்பனா ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்த வாரம் டாப் 5 போட்டியாளர்கள் யார் என்பதை முடிவு செய்யும் பரபரப்பான நிகழ்ச்சியாக அமைய உள்ளது.
அகானா, சூர்யா ஆகிய இருவரில் ஒருவர் இன்று வெளியேற உள்ளார்கள்.
இந்த வார நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியிம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறார்.
அவர் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியும், அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் சேர்ந்து பாடியும் உள்ளார்.
ஒவ்வொரு போட்டியாளரும், தனியாகவும் டூயட் சுற்றில் எஸ்பிபி சரண், கல்பனா, எஸ்பி பாலசுப்ரமணியம் ஆகியோருடனும் பாட உள்ளார்கள்.
இன்று மார்ச் 9 இரவு 8 மணி மற்றும் நாளை இரவு 8 மணிக்கு இந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.