தமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் மக்களிடத்தில் தனிப் பெரும் வரவேற்பு கொண்ட டிவியாக விஜய் டிவி இருந்து வருகிறது.
அந்த டிவி நிறுவனத்தின் மற்றொரு தொலைக்காட்சியாக விஜய் சூப்பர் ஆரம்பமானது.
இப்போது விஜய் சூப்பர் டிவி முற்றிலும் திரைப்படத் தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
பல்வேறு இந்திய மொழிகளில் வெளிவந்துளள படங்களை தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப உள்ளார்கள்.
நாளை மார்ச் 10ம் தேதி முதல் புதுப் பொலிவுடன் மாற உள்ளது விஜய் சூப்பர். அதற்காக புது லோகோவும் தயாராகிவிட்டது. ‘தூள் சினிமா தினம் தினம்’ என்ற குறிச்சொல் வரியுடன் புதிதாக வர உள்ளது.
தினமும் 6 திரைப்படங்களை இந்த டிவியில் ஒளிபரப்ப உள்ளார்கள்.
2018ம் ஆண்டில் 25 ஜிஆர்பி ரேட்டிங்கைப் பெற்ற விஜய் சூப்பர் டிவி, படிப்படியாக உயர்ந்து இப்போது 100 ஜிஆர்பியைக் கடந்துவிட்டது.
தினமும் சூப்பர் ஹிட் கிளாசிக் படங்களை ஒளிபரப்ப உள்ளார்கள். பல்வேறு காலகட்டங்களில் வந்த பலவிதமான படங்கள் அதில் இடம் பெற உள்ளன.
விரைவில் மக்களின் மனம் கவர்ந்த திரைப்பட சேனலாக விஜய் சூப்பர் உருவாகும் என டிவி நிறுவனத்தார் தெரிவிக்கிறார்கள்.