விஜய் டிவியில் இன்று மார்ச் 11 முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 5.30 மணிக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இது ஒரு கிராமத்துக் கதை கொண்ட தொடர். முத்து, மருது, இருவரும் பாசக்கார அண்ணன் தம்பிகள். முத்துவுக்கு மீனாட்சி என்னும் அழகான கனிவான இதயம் கொண்ட பெண்ணை நிச்சயிக்க முடிவு செய்கின்றார்கள்.
ஆனால், முத்து, மீனாட்சியிடம் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தன்னால் இதை குடும்பத்திடம் தெரிவிப்பது கடினம் என்றும் அதனால், அவரையும் இந்த திருமணத்தை வேண்டாம் என மறுக்கச் சொல்கிறார். மீனாட்சியும் அப்படியே செய்துவிடுகின்றார்.
இது பற்றி தெரியாத மருது, தன் அண்ணனை வேண்டாம் என்று சொன்ன மீனாட்சி மீது கோபம் கொண்டு அவருக்குத் தொல்லைகள் கொடுக்கிறார்.
இருந்தாலும், மீனாட்சியும் அதைக் பொறுத்து கொண்டு உண்மையை சொல்லாமல் இருக்கிறார். மருது அந்த உண்மை தெரியும்போது என்ன செய்வார் ?, மீனாட்சியின் நல்ல உள்ளம் பற்றி அவர் அறிந்து கொள்வாரா ?, அதன்பின் நடக்கப் போகும் பரபரப்பான சம்பவங்கள் என்ன என்பதுதான் ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடரின் கதை.
இத்தொடரில் மருது கதாபாத்திரத்தில் ‘பகல் நிலவு’ தொடரின் நடித்த அசீம் நடிக்க, மீனாட்சியாக ‘பகல் நிலவு’ தொடரில் நடித்த ஷிவானி நடிக்கிறார்.
இத் தொடரை ரவி பிரியன் இயக்குகிறார்.