‘பிக் பாஸ்’ ஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படப்பிடிப்பு நிறைவு

‘பிக் பாஸ்’ சீசன் 1ல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆரவ் நாயகனாக நடிக்கும் படம் ‘ராஜ பீமா’.

எஸ்.மோகன் தயாரிக்கும், இந்தப் படத்தை நரேஷ் சம்பத் இயக்குகிறார். ஆஷிமா நர்வால் நாயகியாக நடிக்க, ஓவியா சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதோடு ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் நரேஷ் சம்பத் பேசும் போது,

“பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப் பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதத்தில் கதையில் எழுதும் போது நன்றாக இருக்கும். ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களைச் சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது.

குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்றார்.

தயாரிப்பாளர்ர் மோகன் கூறுகையில்,

“படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை உடனடியாக ஆரம்பித்து, செய்து கொண்டு இருக்கிறோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

Read Previous

விஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்

Read Next

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ பற்றி இயக்குனர் பார்த்திபன் கடிதம்

Most Popular