பரபரபப்பான படப்பிடிப்பில் யோகிபாபு நடிக்கும் ‘ஜாம்பி’

எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி.

புவன் நல்லன் இயக்கும் இந்தப் படத்திற்கு இசை பிரேம்ஜி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்டமாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும், அத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது.

தற்போது யோகி பாபு, யாஷிகா ஆனந்த், T.M.கார்த்திக், மனோபாலா, ராமர், லொள்ளு சபா மனோகர், ஆகியோருடன் யு டியுப் பிரபலங்கள் கோபி, சுதாகர், அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமான காட்சிகள் இடம் பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் வி.ஜி.பி உள்ளிட்ட ரிசார்ட்களில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் பெண்கள் மற்றும் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், கார்த்திக், பிஜிலி ரமேஷ், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் ஒன்றாகப் பங்கேற்ற பிரம்மாண்டமான காட்சி படமாக்கப்பட்டது.

ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும் கூட அதை இயக்குனர் ஹீலியம் விளக்கொளியில் மிகவும் சிறப்பாகக் காட்சிப்படுத்தி உள்ளார்.

சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈசிஆர் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள் இரவில் நடப்பதாகும்.

இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

சாதிப் பிரச்சினைகளை உரித்தெடுக்கும் ‘உறியடி 2’

Read Next

விஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்

Most Popular