பேச்சுத்திறமையை ஊக்கப்படுத்தும் வகையில், இளம் பேச்சாளர்களுக்காக ‘பேச்சுத் திருவிழா’ என்ற நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி தொகுத்து வழங்க ஞாயிறுதோறும் காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பலரும் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது பேச்சுத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று திறமையாளர்களைத் தேர்வு செய்து அவர்களின் பேச்சாற்றலை உலகிற்கு கொண்டு வரும் இந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பேசும் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னையில் நடக்க உள்ள இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள். அந்த மேடையில் தனது பேச்சுத்திறமையை நிரூபிக்கும் திறமையாளர், தமிழகத்தின் சிறந்த பேச்சாளராக அறிவிக்கப்படுவார்.
பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அந்தந்த ஊர்களின் சிறப்பு குறித்த வீடியோ ஒன்றும் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒளிபரப்பப்படுகிறது.
சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரலை விவாத மேடைகளால் பேச்சுப் போட்டி மீதான நாட்டம் மக்களிடையே குறைந்து வரும் நிலையில், அதனை ஊக்கப்படுத்தும் விதமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் ‘பேச்சுத் திருவிழா’.
லியோ சிவக்குமார் இயக்கும் இந்த நிகழ்ச்சியை அசாசி கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது.