போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்த போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

அப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை சமீபத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டார்.

படம் பற்றி போஸ் வெங்கட் கூறுகையில்,

“நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இது பற்றி மேலும் துல்லியமாக சொல்லவேண்டும் என்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இந்த ‘கன்னி மாடம்’.

சாண்டில்யனின் ‘கன்னி மாடம்’ என்ற சரித்திர நாவல்தான் படத்தின் தலைப்புக்குத் தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த ‘கன்னி மாடம்’ என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப் படுகிறது.

மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றி வைப்பர்.

ஸ்ரீராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார். சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜயராகவாபுரம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது

ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை என ஒவ்வொருவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும்,” என்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்.

Read Previous

கலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’

Read Next

போங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’