18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா – சூர்யா கூட்டணி படம் ஆரம்பம்

2001ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் நடித்த சூர்யாவுக்கு அப்படம் மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படத்திலும் சூர்யா நடித்திருந்தார். அதன்பிறகு இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து புரியவில்லை.

18 ஆண்டுகளுக்குப் பின்னர் அக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. சூர்யாவின் 41வது படமான இப்படம் நேற்று கன்னியாகுமரியில் படப்பிடிப்புடன் ஆரம்பமானது. சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 19வது படமாக இது தயாராகிறது. 2 டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள கதாபாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும் என்கிறார்கள். 

சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கிலிருந்து கிரித்தி ஷெட்டி இப்படத்தில் அறிமுகமாக உள்ளார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா அறிமுகமாகிறார்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்குநர் மாயப்பாண்டி. எடிட்டர்  சதீஷ் சூர்யா.

இந்த புதிய பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, ' மீண்டும் பாலா சாரின் 'ஆக்க்ஷன்'  சப்தத்தை 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கத் துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. உங்கள் ஆசிகள் வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

Read Previous

‘கேஜிஎப் 2’ டிரைலர் நாளை வெளியீடு…

Read Next

எட்டு வருடப் பயணம் ‘கேஜிஎப்’ – இயக்குனர் பிரசாந்த் நீல்