‘கேஜிஎப் 2’ டிரைலர் நாளை வெளியீடு…

ஹோம்பாலே பிலிம்ஸ்  பட நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் 2'. 

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’  திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்..

பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'கே ஜி எஃப் 2' படத்தில் கதையின் நாயகனாக யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. சமீபத்தில் வெளியான இப்படத்தின்  ‘தூபான்’ பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. 

அடுத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் டிரைலர் நாளை பெங்களூருவில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட உள்ளது. டீசரைப் போல டிரைலரும் பெரிய சாதனையைப் படைக்கும் என்பது நிச்சயம்.

Read Previous

ஆர்ஆர்ஆர் – விமர்சனம்

Read Next

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா – சூர்யா கூட்டணி படம் ஆரம்பம்

Most Popular