ரவிகுமார் இயக்கத்தில் சூர்யாவை நடிக்கவைக்க மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அயலான்’.
இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு ரவிகுமாரின் அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால், சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. ‘அயலான்’ வெளியீட்டுக்கு முன்பே, சூர்யாவிடம் கதையொன்றை கூறியிருந்தார் ரவிகுமார்.
இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், மாதங்கள் ஆனதால் அந்தப் பேச்சுவார்த்தை தொடரப்படவில்லை.
தற்போது ‘அயலான்’ வெளியீட்டுக்குப் பிறகு சூர்யா – ரவிகுமார் சந்திப்பு நடந்துள்ளது. முன்பு கூறிய கதையை மெருக்கேற்றியிருப்பது குறித்து பேசியிருக்கிறார்கள்.
விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
சூர்யா படத்தை முடித்த பின்பே, ‘அயலான் 2’ படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார் ரவிகுமார். இதனை சிவகார்த்திகேயனும் உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.