‘புஷ்பா 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளுக்கு இடையே முக்கிய மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, அனுஷா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. ‘புஷ்பா’ படத்திற்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்ததால், ‘புஷ்பா 2’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து வருகிறது.
ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மலேசியா கட்டிடங்கள் பாணியிலான அரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இதனிடையே, இந்தப் படத்தின் எடிட்டர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார் ரூபன்.
இப்போது தான் படத்தின் எடிட்டிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சமயத்தில் அவர் விலகியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தினை அளித்துள்ளது. பல்வேறு படத்தின் பணிகள் இருப்பதால் ரூபன் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ரூபனுக்கு பதிலாக நவீன் நூலி எடிட்டராக பொறுப்பேற்று பணிகளை கவனித்து வருகிறார்.