கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், வீடியோ முன்னோட்டங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையா தேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதே மில்லத் ஆகியோரது படங்களை வைத்து வெளியிட்ட முதல் பார்வை போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது.
அதற்கு அடுத்து வெளி வந்த ஸ்னீக் பீக் -1 ல் ‘மாடே மாடே’ என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை நக்கல் செய்யும் காட்சி புதுமையான, நையாண்டித் தனமாகவும், அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இருந்தது.
அடுத்தாக வெளிவந்த ஸ்னீக் பீக் -2 போஸ்டரில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப் போல வேடமிட்டவர்கள், ஒரு டீக் கடை அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற போஸ்டரும் கவனத்தை ஈர்த்தது.
ஸ்னீக்பீக் -2 வீடியோவில் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சி பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
அதைத் தொடந்து தற்போது வெளியாகியுள்ள ஸ்னீக் பீக்-3 போஸ்டரில் எம்.ஜி.ஆர் படம், அதிமுக கொடி போன்று வரையபட்ட சுவத்துக்கு கீழே ரித்திகா சோகமாக உட்காந்து இருப்பது போன்று போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்னீக் பீக்- 3 வீடியோவில் திருக்குறள் எழுதுனது திருவள்ளுவரா என்று இலக்கிய அணி பொறுப்புக்கு வரும் ஒருவர் கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது இன்றைய அரசியல் நிலையைக் காட்டுவது போல் அமைந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.
வித்தியாசமான போஸ்டர்கள், sneak peak-கள் மூலம் கவனம் பெற்று வரும் ‘பப்ளிக்’ படம் என்ன சொல்ல வருகிறது. எந்த அரசியலை பேசப் போகிறது என்கிற எதிர்பார்ப்பை அதிகமாக்கி உள்ளது.