ஜீ 5 – விமல் நடிக்கும் ‘விலங்கு’ வெப் சீரிஸ்

 ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான ’ஆட்டோ சங்கர், பிங்கர் டிப்’ ஆகிய வெப் சீரிஸ், ‘க.பெ.ரணசிங்கம், மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம், பிளட் மணி, முதல் நீ முடிவும் நீ’ உள்ளிட்ட பல ஒரிஜினல் படங்கள், பார்வையாளர்களைக் கவர்ந்தன.

அடுத்ததாக பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘விலங்கு’ என்ற ஒரிஜினல் வெப் சீரிஸை, பிப்ரவரி 18, 2022 வெளியிடவுள்ளது.

7 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக உருவாகியுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பின்னணியில் இத்தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது, எளிய காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக இத்தொடர் அமைந்துள்ளது. ஒரு மர்மமான வழக்கை, விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார், அதில் ஏற்படும் பிரச்சினைகள், திருப்பங்களே இத் தொடர்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் கையாண்டுள்ளார், கலை இயக்குனர் – G.துரைராஜ்.

Read Previous

‘பப்ளிக்’ பேசப் போகும் அரசியல் என்ன ?

Read Next

வெற்றிமாறன் கதையில் அமீரின் ‘இறைவன் மிகப்பெரியவன்’ ஆரம்பம்

Most Popular