இளையராஜாவுக்கு பத்ம விபூஷண், திரையுலகினர் வாழ்த்து

இந்தியத் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் முதன்மையானவராக இருக்கும் இளையராஜாவுக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருது அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது.

சற்று முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா, “விருதுகளைப் பற்றி நான் என்ன  நினைப்பேன் என்று உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த விருதின் மூலமாக பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, தமிழ் மக்களையும், தமிழ்நாட்டையும் கௌரவிக்கிறது என்றே நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.

இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குத் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஷால் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன், “எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை  இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது,” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவருடைய டிவிட்டர் பதிவில், “

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தது மட்டுமல்லாமல் தமிழ் இசையையும், கிராமிய இசையையும் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் இசைஞானி இளையராஜா.

பத்ம விபூஷன் விருது பெறும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று, விருதுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்

நடிகர் விஷால், “நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை இந்திய அரசு இசையின் கடவுள் இளையராஜா சாருக்கு அறிவித்துள்ளது. மனமார்ந்த வாழ்த்துகள் சார், நம் அனைவருக்கும் பெருமையான தருணம்,” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Read Previous

‘அச்சமில்லை அச்சமில்லை’ இசை வெளியீட்டில் சமூக ஆர்வலர்கள்

Read Next

ஏமாலி, புது முயற்சி – வி.இசட். துரை

Most Popular