டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்க, முத்து கோபால் இயக்கத்தில், விவுரி குமார் இசையமைப்பில், அமீர், முத்து கோபால், ஹரீஷ், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
பொதுவாக, திரைப்பட விழாக்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள்தான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமூக ஆர்வலர்களை அழைத்து விழாவை நடத்தினார்கள்.
டிராஃபிக் ராமசாமி, சுப.உதயகுமார், கார்ட்டூனிஸ்ட் பாலா, வளர்மதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் தயாரிப்பாளர் அமீர் நல்ல கதைகளில் நடிக்க நடிகர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“இது போன்ற ஒரு கதையை ஒரு நாயகனிடம் நடித்தால் எந்த நடிகரும் இது மாதிரியான கதைகளில் நடிக்கத் தயாராக இல்லை. விஜய், அஜித் ஆகியோர் 100 கோடி வியாபாரத்தைத் தொட்டுவிட்டதால் அவர்கள் இது போன்ற படங்களில் நடிப்பதில்லை. அவர்களுக்கு அடுத்த இடங்களில் இருப்பவர்களுக்கு விஜய், அஜித் போல ஆக வேண்டும் என்ற ஆசையில் இம்மாதிரி படங்களில் நடிப்பதில்லை.
புதிதாக வருபவர்களும் ஒரு படம் இரண்டு படங்களில் நடித்த பின் அவர்களும் இது போன்ற படங்களில் நடிக்க மறுத்து, பெரிய படங்களில் நடிக்கப் போய்விடுவார்கள். அது அவர்களது தவறு இல்லை, வளர்ச்சி. இருந்தாலும் அவர்கள் இது போன்ற படங்களில் நடித்தால், புதிய கருத்துக்களும், புதிய படங்களும் அதிகம் வர வாய்ப்பிருக்கும்.
இப்படத்தை எடுப்பதற்காக இயக்குனர் முத்து கோபாலின் அப்பா, அவரிடமிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தைக் கொடுத்து படத்தைத் தயாரிக்க வைத்தார். அதன் பின் 70 சதவீதம் முடிந்த பிறகே இந்தப் படத்தை நான் தயாரிக்க ஆரம்பித்தேன்.
இந்தப் படம் வெற்றியடைந்தால் ‘அச்சமில்லை அச்சமில்லை’ இரண்டாம் பாகம் எடுப்பேன். தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நல்ல படம் எடுக்கும் முதல் பட இயக்குனர்களுக்கு ரசிகர்கள் நிச்சயம் வெற்றி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்